15 வயதுக்குட்பட்ட 50 ஓவர் போட்டியில் 700 ஓட்டங்களை குவித்த ஜோசப் வாஸ் அணி…!
இலங்கையின் ராகம பசிலிக்கா மைதானத்தில் இன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட பிரிவு 1 கிரிக்கெட் ஆட்டத்தில் வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி, ராகம பசிலிக்கா கல்லூரியை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 708 ஓட்டங்களைப் பெற்றது.
வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட அணித்தலைவர் இனெஸ் துலாஞ்சன 130 பந்துகளில் 344 ஓட்டங்களைப் பெற்று எல்லோரது கவனத்தையும் இப்போது ஈர்த்திருக்கிறார்.
இனேஷின் இன்னிங்ஸ் 19 சிக்ஸர்கள் மற்றும் 44 பவுண்டரிகள் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
200 ரன்களில் இருந்து 300 ரன்களை எட்டுவதற்கு இன்ஷ் வெறும் 29 பந்துகளை மட்டுமே செலவிட்டிருந்தார்.
இந்த இன்னிங்ஸில் இனேஷின் தாக்குதல் வேகம் Strike rate 264.62 ஆக காணப்பட்டது.
இதனிடையே, மூன்றாவது விக்கெட்டுக்கு இன்ஷ் துலாஞ்சனா மற்றும் நெவின் சங்கேத் ஜோடி 452 ரன்கள் சேர்த்தது.
இதற்கு 194 பந்துகள் மட்டுமே செலவானது.
15 வயதுக்குட்பட்ட ஜோசப் வாஸ் கல்லூரி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 708 ரன்கள் எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராகம பசிலிக்கா கல்லூரி U-15 அணியால் 9 விக்கெட்டுக்கு 43 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
ஜோசப் வாஸ் 665 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் இமாலய வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.