17 ஆண்டுகளுக்குப்பின்னர் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து- அட்டவணை விபரம்…!

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து நீண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தனிச்சிறப்பு வாய்ந்தது அமைந்துள்ளதுடன் இந்த போட்டியில் 7 சர்வதேச டி20 போட்டிகள் அடங்கும்.

ஏழு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டி செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெறும்.

போட்டியின் முதல் 4 போட்டிகள் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்திலும் மற்ற மூன்று போட்டிகள் கடாபி மைதானத்திலும் நடைபெறும்.

இங்கிலாந்தின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியில் இந்த இருபதுக்கு 20 தொடர் இடம்பெற்றுள்ளது. அதன்பிறகு உலக இருபதுக்கு 20 தொடரில் அணிகள் விளையாடி முடிந்தபின்னர் டிசம்பரில் இரு நாடுகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

T20 போட்டி அட்டவணை ?

செவ்வாய், 20 செப்டம்பர் – 1வது T20, கராச்சி

வியாழன், 22 செப்டம்பர் – 2வது T20, கராச்சி

வெள்ளி, 23 செப்டம்பர் – 3வது T20, கராச்சி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் – 4வது T20, கராச்சி

புதன்கிழமை, 28 செப்டம்பர் – 5வது T20, லாகூர்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் – 6வது T20I, லாகூர்

ஞாயிறு, 2 அக்டோபர் – 7வது T20, லாகூர்