17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த விராட் கோலி!

17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த விராட் கோலி!

17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 72 பந்துகளில் 4 சிக்ஸ், 12 ஃபோர்ஸ் உட்பட 113 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இவருக்கு பின் அதிகபட்சமாக டூ பிளசிஸ் 44 ரன்கள் சேர்த்துள்ளார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன்கள் சேர்த்துள்ளனர்.

இதில் விராட் கோலி அரைசதம் அடிப்பதற்கு 39 பந்துகளையும், 51 ரன்கள் முதல் 100 ரன்கள் வரை எடுப்பதற்கு 28 பந்துகளையும் எடுத்து கொண்டுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி பவர் பிளே ஓவர்களில் 25 பந்துகளை எதிர்கொண்டும் 32 ரன்களை மட்டுமே விராட் கோலி சேர்த்திருக்கிறார். இது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 67 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலமாக விராட் கோலி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன் மூலமாக 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சதம் அடிப்பதற்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனை விராட் கோலிக்கு சொந்தமாகியுள்ளது. இதற்கு முன் ஆர்சிபி அணிக்காக 2009ஆம் ஆண்டு மணீஷ் பாண்டே டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான 67 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 2011ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய சச்சின் டெண்டுல்கர் 66 பந்துகளில் சதமடித்து 2வது இடத்திலும், 2010ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக ஆடிய டேவிட் வார்னர் 66 பந்துகளில் சதமடித்து சச்சினுடன் 2வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இதேபோல் 2022ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லரும் 66 பந்துகளில் சதமடித்துள்ளார். இதனால் விராட் கோலி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடிக்கும் 8வது சதம் இதுவாகும். அதேபோல் இந்திய அணியால் டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கையையும் காட்டிலும் ஆர்சிபி அணியால் அடிக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.