171 வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பெறப்பட்ட முதல் சதம் லிவிங்ஸ்டன் அசத்தல்..!

171 வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பெறப்பட்ட முதல் சதம் லிவிங்ஸ்டன் அசத்தல்..!

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுறலறுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்தின் நட்சத்திரம் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அவருடைய முதல் சதத்தை பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் அணிக்கு 171 T20 போட்டியாக அமைந்தது , இதிலே 105 வெற்றிகளை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது.

அதிக போட்டிகளில் விளையாடிய அணி மட்டுமல்லாது அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்டு அணியாகவும் பாகிஸ்தான் அணிதான் காணப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக T20 போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்த வீரர் என்ற பெருமையை லிவிங்ஸ்டன் பெற்றுக்கொண்டார்.  இருவருக்கும் எந்தவொரு வீரரும் பாகிஸ்தான் அணிக்கெதிராக சதம் எதனையும் பெறவில்லை ,அந்தளவு தூரம் பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக  இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே சான்றாக அமைந்திருக்கிறது.

Highlights ???