19 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்து பரிதாப தோல்வியை சந்தித்த அவுஸ்திரேலியா …!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நிறைவுக்கு வந்திருக்கிறது.
St Lucia வில் இன்று காலை இடம்பெற்ற இந்த பரபரப்பான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.
முன்னதாக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 145/6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
146 எனும் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி இலகுவாக போட்டியில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
70 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள் ,பின்னர் 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா, திடீரென இறுதி 6 விக்கெட்டுகளை வெறுமனே 19 ஓட்டங்களுக்குள் பரிதாபமாக இழந்து தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தங்கள் வலிமையை நிலைநிறுத்தி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.
முன்னதாக தென்னாபிரிக்காவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இந்த வெற்றி மிகப்பெரும் உந்துசக்தியாக அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
கன்னி அரைச்சதம் அடித்த அன்ரூ ரசல் .
வீடியோ ???
Andre Russell maiden international T20I fifty ( 51 from just 28 balls ) with 3 fours and 5 sixes. Another Andre Russ masterclass ???#AndreRussell #WIvsAUS #WIvAUS #AUSvWI #AUSvsWI #Cricket #KKR pic.twitter.com/wVGZG6Rb3w
— ABDULLAH NEAZ (@AbdullahNeaz) July 10, 2021
வீடியோ இணைப்பு ????