19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பை – இந்திய அணியில் தமிழக வீர்ர் சேர்ப்பு..!

19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர்  உலகக்கோப்பை – இந்திய அணியில் தமிழக வீர்ர் சேர்ப்பு..!

19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் வரும் ஜனவரி மாதம் 14ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது, இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வீரர் யாஷ் துல் தலைமையிலான அணியில் தமிழக வீரர் மானவ் பராக் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்: யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே.ரஷீத் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஸ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கவுஷால் தம்பே, ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான்.

இந்த வீர்ர்களுக்கு தேசிய கிரிக்கட் அக்கடமியில் வைத்து அண்மையில் ரோகித் சர்மா ஆலோசனைகளை வழங்கியிமை குறிப்பிடத்தக்கது.

இந்திய இளையோர் அணி 2000 ஆம் ஆண்டு முகமது கைப் தலைமையிலும், 2008 விராட் கோலி ,2012 ல் உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018 பிரித்வி ஷா தலைமையிலும் 4 உலக கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.