1958-க்குப் பிறகு முதல் முறையாக வேல்ஸ் உலகக் கோப்பைக்குத் தகுதி..!

உக்ரைனை வீழ்த்தி 1958-க்குப் பிறகு முதல் முறையாக வேல்ஸ் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.

கரேத் பேலின் 34-வது நிமிட ஃப்ரீ-கிக், வேல்ஸை கத்தாருக்கு அனுப்ப வழிவகுத்துள்ளது.

அமெரிக்கா , ஈரான், இங்கிலாந்துடன் வேல்ஸ் அணி B குழுவில் நுழையும்.

ஆனால் வீரம் செறிந்த உக்ரைன் தரப்புக்கு மனவேதனையாக இருந்தது.

இந்த வார தொடக்கத்தில் ஸ்காட்லாந்தை தோற்கடித்த பிறகு, உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் முயற்சிகளைப் பற்றி மிகவும் பெருமைப்படலாம். கார்டிஃப் சிட்டி ஸ்டேடியத்தில் அவர்கள் சிறந்த அணியாக ஆற்றலை வெளிப்படுத்தினர்.

64 ஆண்டுகளில் முதல் உலகக் கோப்பைக்கு தகுதி பெற வேல்ஸ் வலுவாக போராடி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.