2 கோடிக்கு IPL ஏலத்தில் குதிக்கும் 17 இந்திய வீரர்கள் விபரம்..!
பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில் 590 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) வெளியிட்டது.
590 வீரர்களில் 370 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 220 பேர் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்.
முன்னதாக 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மூலம் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இவர்களைவிட ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அடிப்படை விலையான ரூ.2 கோடியாக தங்கள் IPL ஏலத்தொகையை நிர்ணயித்துள்ளனர்.
2 கோடி அடிப்படை விலை கொண்ட இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1 ரவிச்சந்திரன் அஸ்வின்
2 ஷிகர் தவான்
3 ஷ்ரேயாஸ் ஐயர்
4 முகமது ஷமி
5 தேவ்தட் படிக்கல்
6 சுரேஷ் ரெய்னா
7 ரோபின் உத்தப்பா
8 க்ருனால் பாண்டியா
9 ஹர்ஷல் படேல்
10 தினேஷ் கார்த்திக்
11 இஷான் கிஷன்
12 அம்பதி ராயுடு
13 தீபக் சாஹர்
14 புவனேஷ்வர் குமார்
15 ஷர்துல் தாக்கூர்
16 உமேஷ் யாதவ்
17 யுஸ்வேந்திர சாஹல்
இந்த 17 இந்திய வீரர்கள் தவிர, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், 31 வெளிநாட்டு வீரர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
20 வீரர்கள் ரூ. 1.5 கோடியில் தங்களை பதிந்துள்ளனர், மேலும் 34 கிரிக்கெட் வீரர்கள் அடிப்படை விலை ரூ. 1 கோடியுடன் பட்டியலில் உள்ளனர்.
“ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ஆர் அஷ்வின், முகமது ஷமி, இஷான் கிஷன், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறந்த இந்திய கிரிக்கெட் திறமையாளர்களின் சேவைகளைப் பெறுவதற்கான கடுமையான போராட்டம் உள்ளது.
எது எவ்வாறாயினும் இந்தமாதம் இடம்பெறவுள்ள IPL ஏலத்தில் எந்த எந்த வீரர்கள் எந்த எந்த அணிகளில் சேர்க்கிறார்கள், எவ்வளவு ஏலத்தொகைக்கு போகிறார்கள் எனபதை பொறுத்திருந்தே அறிந்துகொள்ளலாம்.