2 ம் நாளில் பாகிஸ்தான் ஏமாற்றம்- தென் ஆப்பிரிக்கா போராடடம்.

தென் ஆபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ம் டெஸ்ட் போட்டியின் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி கடந்த போட்டியைப் போன்றே ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தாலும், பாவாட் அலாம் மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் இணைந்து நேற்றைய நாளில் நம்பிக்கை ஊட்டினார்.

ஆரம்ப 3 விக்கெட்களும் 22 ஓட்டங்களுக்கு இழக்கப்பட 4 வது விக்கெட்டில் பாவாட் அலாம் மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் இருவருமாக வீழ்த்தப்படாத 123 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

நேற்றைய நாள் நிறைவில் மழையால் ஆட்டம் நிறுத்தப்படும்வரை பாகிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.
களத்தில் பாபர் அசாம் 74 ஓட்டங்களுடனும் பாவாட் அலாம் 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காது இருந்தனர் .

இன்றைய 2 ம் நாள் ஆட்டம் தொடர்ந்த வேளை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 77 ஓட்டங்களுடனும் பாவாட் அலாம் 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தாலும் சகலதுறை வீரர் பாகிம் அஷ்ரப் ஆட்டம் இழக்காது 78 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.அண்ரிச் நோர்கியா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு ஆடிய தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.

நாளை போட்டியின் 3 ம் நாள் ஆட்டமாகும்.

Previous articleஜோ ரூட்டின் சத்தத்தின் பின்னர் மகிழ்ச்சியில் யார் தெரியுமா – மீம்ஸ் …!
Next articleபேசும் படம்- தாய்ப்பாலூட்டும் ஹாக்கி வீராங்கனை…!