20 ஆண்டுகளுக்கு பின்னர் சதமடித்த நமபிக்கை நாயகன் நிஸ்ஸங்க.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இறுதி நாள் ஆட்டம் இடம்பெற்றுவருகின்றது.

போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 375 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் 2 ம் இன்னிங்சில் இலங்கை அணியின் புதுமுக வீரர் பத்தும் நிஸ்ஸங்க சதமடித்து அசத்தினார், 22 வயதான நிஸ்ஸங்க முதல்தர போட்டிகளில் 67 எனும் உயரிய சராசரியைக் கொண்டுள்ளதுடன், அறிமுக போட்டியில் டெஸ்ட் சதமடித்த 4 வது இலங்கையர் எனும் பெருமை பெற்றார்.

2001 ம் ஆண்டு இறுதியாக திலான் சமரவீரர சதம் பெற்றதற்கு பின்னர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த நிஸ்ஸங்க, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிஸ்ஸங்கவுக்கு மஹேல ஜெயவர்த்தன வாழ்த்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleடெல்லி காப்பிட்டல்ஸ் அணிக்கு யார் தலைவர் ?
Next article#ENGvIND-ராகுல், பாண்ட் அதிரடி- 337 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.