20 இடங்கள் முன்னேறிய முஸ்தபிசுர் ரஹ்மான், முதலிடத்தை நெருங்கிவிட்ட ஹசரங்க- புதிய தரவரிசை!

 20 இடங்கள் முன்னேறிய முஸ்தபிசுர் ரஹ்மான், முதலிடத்துக்கு நகரும் ஹசரங்க.!

 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய T20 போட்டிகளுக்கான தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இறுதியாக நிறைவுக்கு வந்த பங்களதேஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரை அடுத்து இந்த புதிய தரவரிசை வெளியானது.

இதனடிப்படையில் 20 இடங்கள் முன்னேறி இருக்கும் முஸ்தாபிஜூர் ரஹ்மான் 10 வது இடத்தைப் பிடித்திருக்கிறார், இரண்டாவது இடத்திலிருக்கும் இலங்கையின் வணிந்து ஹசரங்க இன்னும் 28 புள்ளிகள் பெறுவாராக இருந்தால் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆக மொத்தத்தில் புதிய தரவரிசையில் தொடர்ந்து Shamzi முதலிடத்திலும் வணிந்து ஹசரங்க இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றனர்.