200 M ஓட்டப் பந்தயத்தின் புதிய சாம்பியனாக கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் ..!

200 M ஓட்டப் பந்தயத்தின் புதிய சாம்பியனாக கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் ..!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் கனேடிய வீரர் ஆண்ட்ரே டி கிராஸ் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

கடந்த மூன்று (2008, 2012, 2016) ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த உசைன் போல்ட்டின்  வெற்றிடத்தை தொடர்ந்து இப்போது புதிய ஒலிம்பிக் சாம்பியனாக 200 மீட்டரில் ஆண்ட்ரே டி கிராஸ் முத்திரை பதித்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே இடம்பெற்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 3வது இடத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்டுடன் போட்டி போட்டு 100 M இல் வெண்கலம் , 200 M ல் வெள்ளிப்பதக்கமும் பெற்ற பெருமை ஆண்ட்ரே டி கிராஸை சாரும்.

டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இன்று(4) புதன்கிழமை நடைபெற்ற 200 M இறுதிப் போட்டியில் 19.62 வினாடிகளில் நேரத்தை பதிவு செய்த ஆண்ட்ரே டி கிராஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

டி கிராஸ் இப்போது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து பதக்கங்களைக் கொண்டுள்ளார் – ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்ற ஒவ்வொரு நிகழ்விலும் அவர் ஒரு பதக்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக்கின் வரலாற்றில் கனேடியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

டி கிராஸின் நேரம் 200 M ல் ஒரு புதிய தனிப்பட்ட மற்றும் கனடிய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது..

?வெள்ளி 200 M ரியோ ஒலிம்பிக் 2016
?வெண்கலம்100 M ரியோ ஒலிம்பிக் 2016
?வெண்கலம்100m #Tokyo2020

?தங்கம் 200M #Tokyo2020

De grasse 200 m Tokyo olimpic

De grasse 200 m Tokyo olimpic

Previous articleமத்தியூஸ் ,திரிமான்ன, திமுத் இல்லாத இலங்கையின் 60 பேர் கொண்ட உத்தேச T20 அணி ..!
Next articleஇலங்கையில் இடம்பெறவுள்ள SLC T20 லீக் – ஹசரங்க, துஷ்மந்த சமீர, குசல் பெரேராவுக்கு ஓய்வு- முழுமையான அட்டவணை ,வீரர்கள் விவரம் வெளியீடு ..!