2016 ம் ஆண்டுக்கு பின்னர் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகள்- இந்தியா முதலிடம்…!

2016 ம் ஆண்டுக்கு பின்னர் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகள்- இந்தியா முதலிடம்…!

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ளன.

இன்றைய 2 வது டெஸ்ட்டில் போட்டியில் 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் 2-0 என கைப்பற்றி அசத்தியது இந்திய அணி.

இதன்முலம் 2016 ம் ஆண்டுக்கு பின்னர் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் இந்திய அணி 41 டெஸ்ட் வெற்றிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் இந்திய அணி 67 போட்டிகளில் 41 வெற்றிகளும், 16 தோல்விகளுடனும் இந்தியா முதலிடத்தில் காணப்படுகின்றது.

2 வது இடத்தில் இங்கிலாந்து 80 போட்டிகளில் 33 வெற்றிகளுடனும், அவுஸ்திரேலியா 56 போட்டிகளில் 26 வெற்றிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளன.

இலங்கை அணி 56 போட்டிகளில் 20 வெற்றிகளுடனும் 25 வெற்றிகளுடனும் காணப்படுகின்றன.