2020 லிருந்து இந்திய துடுப்பாட்ட மும்மூர்த்திகளின் துடுப்பாட்ட சராசரி- ரொம்ப நல்லாருக்குப்பா..!
இந்திய , இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த போட்டியிலும் இந்திய அணித்தேர்வு குறித்து பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, அஷ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகின்றமை, புஜாரா ,ரஹானே ஆகியோரின் சொதப்பல்கள் என்று ஏராளம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவின் துடுப்பாட்ட முத்துலும்புகளான புஜாரா, கோஹ்லி, ரஹானே ஆகியோரின் துடுப்பாட்ட சராசரிகள் எல்லோருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளன.
2020 ம் ஆண்டுக்கு பின்னர் 3வரும் போட்டிபோட்டு சொதப்பிக் கொண்டு வருகின்றனர்.
புஜாரா : 26.73
கோஹ்லி : 44.77
ரஹானே : 27.70
ஆகிய மூவரும் தொடர்ச்சியாக சறுக்குவதால் மாற்று வீரர்கள் குறித்து அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமை எழுந்துள்ளது.
கோஹ்லி, சாஸ்திரி இன்னும் தாமதிக்க முடியாது.