2022 டி 20 உலகக் கோப்பைக்கு இந்தியா தேர்வு செய்யக்கூடிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள்_ நிகில் சோப்ரா தகவல்…!

2022 டி 20 உலகக் கோப்பைக்கு இந்தியா தேர்வு செய்யக்கூடிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள்_ நிகில் சோப்ரா தகவல்…!

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் யார் என்பது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ரா சமீபத்தில் தனது கருத்தை தெரிவித்தார்.

ஆஸியில் உள்ள நிலைமைகள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் அணியில் செல்ல வேண்டும் என்று சோப்ரா கருதுகிறார்.

சுவாரஸ்யமாக, ஐபிஎல் 2022ல் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் பெயரை சோப்ரா எடுக்கவில்லை.

டி20 உலகக் கோப்பை 2021ல் இந்தியாவுக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோரையும் அவர் தவிர்த்துவிட்டார்.

அவர் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தார். ஜடேஜாவுடன் இணைந்து யார் பந்து வீச வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன்பு ஆடுகளம் மற்றும் நிலைமைகளையும் கருத்தில் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

பின்னர் அவர் ராகுல் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை லெக் ஸ்பின்னர் இடத்திற்கான வேட்பாளர்களாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Ravi Bisnoi