2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் IPL திறமையின்படி தெரிவு செய்யப்படக்கூடிய 3 வீரர்கள்…!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் IPL திறமையின்படி தெரிவு செய்யப்படக்கூடிய 3 வீரர்கள்…!

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணியின் தேர்வுக்காக காத்திருக்கும் ஐபிஎல் வீர்ர்களை பார்க்கலாம்.

ஐபிஎல் 2022ல் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் தேர்வாளர்களுக்கு சில புதிய விருப்பங்கள் உள்ளன. இந்த கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக IPL போட்டிகளில் செயல்பட்டதால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடருக்கு தேர்வாளர்கள் அவர்களை பரிசீலிக்கலாம்.

அதனடிப்படையில் 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மறுபரிசீலனை செய்யப்படக்கூடிய மூன்று வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்.

1) தினேஷ் கார்த்திக்.

போட்டிகள்: 6 || ரன்கள்: 197 || சராசரி: 197 || ஸ்ட்ரைக் ரேட்: 209.

2) டி நடராஜன்.

போட்டிகள்: 5 || விக்கெட்டுகள்: 11 || எக்கனமி: 8.5.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மறுபரிசீலனை செய்யப்படக்கூடிய வீரர்களில் ஒருவர்.

அவர் தனது T20I வாழ்க்கையில் ஒரு சிறந்த தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், மார்ச் 2021 முதல் உபாதை காரணமாக T20I விளையாட்டை விளையாடவில்லை.

3) குல்தீப் யாதவ்.

போட்டிகள்: 5 || விக்கெட்டுகள்: 11 || Economy : 8.24.

கடந்த சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் குல்தீப்புக்கு சரியாகப் அமையவில்லை எனலாம். அவர் 2019 இல் 2 ஆட்டங்கள், 2020 இல் 1 போட்டி மற்றும் 2021 இல் மேலும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். IPL போட்டிகள் மூலமாக இந்திய தேர்வாளர்களை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஏப்ரல் 16, 2022 இன் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலானது.