தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் 2022 – 2023 பருவகாலத்திற்காக இடம்பிடித்துள்ள வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஜானமேன் மலான் மற்றும் கீகன் பீட்டர்சன் ஆகிய புதிய வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக ஜானமேன் மலான் சிறப்பாக செயல்பட்டார்.
2019 பெப்ரவரி 201 இல் அறிமுகமான அவர், 14 போட்டிகளில் 69 சராசரியுடன் 3 சதங்களுடன் 759 ரன்கள் எடுத்துள்ளார்.
அவரது அற்புதமான பேட்டிங் திறமையால், 25 வயதான அவர் 2021 ஆம் ஆண்டிற்கான ICC யின் வளர்ந்து வரும் ஆண்களுக்கான கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
CSA CEO ஃபோலெட்ஸி மொசெகி, மாலன் மற்றும் பீட்டர்சனுக்கு புதிதாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை இருப்பதாக மொசெகி கூறினார்.
“டெம்பா பவுமாவின் தலைமையில் தொடரை இழக்காத ஒயிட்-பால் அணிக்கு இது ஒரு விதிவிலக்கான பருவமாகும். எங்களுக்கு வரவிருக்கும் மிகப்பெரிய தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலியாவில் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையாகும், மேலும் டெம்பாவும் அவரது ஆட்களும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சரித்திரம் படைப்பார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை, 2022-23 பருவ காலத்திற்காக தென்னாப்பிரிக்க அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில், டெம்பா பவுமா, டீன் எல்கர், குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, கீகன் பீட்டர்சன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், தப்ராசிஸ் ரபஹாம், டப்ராசி ஸ்பாடா ஆகிய வீரர்களும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.