2022-23 க்கான பாகிஸ்தான் அணியின் கிரிக்கட் போட்டிகள் விபரம்?

2022-2023 சீசனில் தலா இரண்டு முறை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான போட்டிகளை பாகிஸ்தான் நடத்துகிறது.

நியூசிலாந்து கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து, பாதுகாப்பு காரணங்களுக்காக முதல் ஒருநாள் போட்டிக்கு முந்தைய நிமிடங்களில் தொடரை கைவிட்டு வெளியேறியது.

அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தும் கூட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதில்லை என்று முடிவு செய்தது, இது கிரிக்கெட் சகோதரத்துவத்தின் கடும் விமர்சனத்தை ஈர்த்தது. இருப்பினும், இரு அணிகளும் இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்ய உள்ளன.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ள சமீபத்திய அட்டவணையின்படி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா இரண்டு வெவ்வேறு சுற்றுகளுக்கு பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளன.

அடுத்த ஆண்டுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

 

அதனடிப்படையில் இங்கிலாந்து இரண்டு வெவ்வேறு பயணங்களில் பாகிஸ்தானில் 7 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் பாகிஸ்தான் தங்கள் சொந்தத் நாட்டில் இடம்பெறும் தொடரை அதிகம் பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்பபடுகிறது.