2022 FIFA கால்ப்பந்து உலகக்கிண்ணத்திற்கான பெரும் பாலன ஏற்பாடுகள் நிறைவு

2022 FIFA கால்ப்பந்து உலகக்கிண்ணத்திற்கான பெரும்பாலன ஏற்பாடுகள் நிறைவு !

2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள பீபா உலகக் கிண்ண கால்ப்பந்து போட்டி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. மெக்சிகோவுக்கான கத்தாரின் தூதுவர் HE Mohammed bin Jassim Al Kuwari அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

Fox Sport செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, ”கத்தாரில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டு கால்ப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரும், முக்கிய விளையாட்டுப் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். நாம் திட்ட மிட்டுள்ள படி கத்தாரில் நடைபெறவுள்ள பீபா போட்டிகளில் இரண்டை ஒருவர் ஒரே நாளில் பார்வையிட முடியும் என்றார்.



அத்துடன் பீபா உலகக் கிண்ண கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்துவதற்கான 90 சதவீமான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கத்தார் வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. கபாலத் முறைமை நீக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள், பணிபுரியும் முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கண்காணிக்கப்படுகின்றது. மேலும் பணியாளர்ளின் உரிமைகள் விடயத்தில் கத்தார் முன்னுதராணமாக திகழ்கின்றது என்பதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.