2024 லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் ஆட்ட நிர்ணயம்…!

2024 லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் மேலாளர் ஒருவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மேல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார்.

2024 லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் அணி முகாமையாளரான யோனி பட்டேலுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய 7 அணிகள் பங்கேற்கும் லெஜண்ட் கிரிக்கெட் லீக் போட்டி மார்ச் மாதம் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

கண்டி சாம்ப் ஆர்மி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க மற்றும் பஞ்சாப் ராயல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நியூசிலாந்து சூப்பர் ஸ்டார் நீல் புரூம் ஆகியோர் மேட்ச் பிக்சிங் ஒப்பந்தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது.