2025-2027 ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி விபரங்கள் வெளியீடு….!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த இரண்டு கட்டங்கள் அடுத்த ஆண்டு மே முதல் ஏப்ரல் 2027 வரை நடைபெற உள்ளது.

இந்த இரண்டு கட்டங்களிலும் ஒரு அணி 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். இவற்றில் மூன்று போட்டிகள் சொந்தமண்ணில் நடத்தப்பட வேண்டும், மீதமுள்ள மூன்று போட்டிகள் நாட்டிற்கு வெளியே விளையாட வேண்டும்.

2023-25 ​​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பருவத்தில், இலங்கை அணி சொந்தமண்ணில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளோடும் வெளி நாடுகளில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

பின்னர் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இலங்கை அணி இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் சொந்தமண்ணிலும், வெளி நாடுகளில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடும்.

இந்த இரண்டு நிலைகளிலும் இந்திய-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் சேர்க்கப்படவில்லை என்பதும் தனிச்சிறப்பு.