2026 ல் ICC உலக கிண்ணம் இலங்கையில்..!

2026 டி20 உலகக் கோப்பை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் 2026 20-20 உலகக் கோப்பைக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் தொடர்பான போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த தீர்மானித்ததன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது நிச்சயம் சிறப்பு. 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 அணிகள் 55 போட்டிகளில் விளையாட உள்ளன.

Previous articleவடக்கின் பெரும்சமர்- யாழ் இந்து வெற்றி..!
Next articleTime out க்கு நிகரான புதிய முறையை அமுல்படுத்தும் ICC..!