21 வருடங்களின் பின்னர் சமிந்த வாஸ் படைத்த சாதனையை சமன்செய்த அசித்த பெர்னாண்டோ!

21 வருடங்களின் பின்னர் சமிந்த வாஸ் படைத்த சாதனையை சமன்செய்த அசித்த பெர்னாண்டோ!

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

போட்டி Draw ல் முடியும் என்ற பங்களாதேஷ் அணியின் நம்பிக்கையை தகர்த்தது அசித்தவின் தீர்க்கமான பந்து வீச்சு என்பதை மறக்கமுடியாது.

முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்சில் அசித்த நிதானத்துடன் பந்துவீசினார். அவர் சேர்த்த அழுத்தத்தின் பலனாக ஷகிப் அல் ஹசன் முதல் போட்டியில் கையாண்ட யுக்தியை அசித்தவால் மீண்டும் செய்ய முடிந்தது.

முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அசித்த, போட்டி முழுவதும் 144 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது 21 வருடங்களின் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.

சமிந்த வாஸ் கடைசியாக 2001-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அந்த சாதனையை நிகழ்த்தினார்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அசித்த பெர்னான்டோ பெற்றார்.

மிர்பூர் போன்ற ஆடுகளத்தில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு அசித்தாவின் பந்துவீச்சு வலுவாக உள்ளது என்பது இரகசியமல்ல. எவ்வாறாயினும், அசித்தவின் இந்த ஆற்றல் வெளிப்பாடு சுரங்கா லக்மாலுக்குப் பின்னர் காலியாக உள்ள வேகப்பந்து வெற்றிடத்தை நிரப்பும் என நம்பியிருக்கலாம்.

YouTube Link ?