லோகேஷ் ராகுல் தலைவரான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் போராட்டத்திற்கு மத்தியில் பஞ்சாப் கிங்ஸ் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் உடைய இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 227 ஓட்டங்கள் குவித்தது, லோகேஷ் ராகுல் 91 ,கிறிஸ் கெயில் 28 பந்துகளில் 40 ஓட்டங்கள்,தீபாக் ஹுடா 28 பந்துகளில் 64 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தனர்.
இளம் வீரர் சேட்டன் சஹரியா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். 16 .25 கோடிக்கு IPL ஏலத்தில் பெறப்பட்ட கிறிஸ் மோரிஸ் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
228 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களம் புகுந்த ராஜஸ்தான் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் பூஜ்ஜியத்தில் ஆட்டம் இழந்தாலும் , சஞ்சு சம்சன் அற்புதமான இன்னிங்சை ஆடினார்.
இறுதிவரைக்கும் போராடி சாம்சன் 119 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார், 12 பவுண்டரி 7 சிக்சர்கள் இதிலே உள்ளடக்கம், பட்லர் 25 ,ஷிவம் துபே 23 , ரியன் பராக் 25 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தனர்.
இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவையான நிலைகள் அர்ஷிதீப் சிங்கின் அற்புதமான பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது .
சாமி 33 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள், அர்ஷிதீப் சிங் 35 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கட்டுகள் கைப்பற்ற, 14 கோடிக்கு ஏலத்தில் பெறப்பட்ட ஜெய் ரிச்சர்ட்சன் 55 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட், இன்னுமொரு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் ஏலத்தில் 8 கோடிக்கு பெறப்பட்ட மெரிடித் 49 ஓட்டங்களை ஒரு விக்கெட்டை கைப்பற்றினார் .
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் போராட்டத்திற்கு மத்தியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஆட்டநாயகன் விருது சஞ்சு சம்சன் வசமானது,