23 வருட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மகளிர் கிரிக்கெட்டின் சச்சின்..!

23 வருட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மகளிர் கிரிக்கெட்டின் சச்சின்..! 

எல்லா காலத்திலும் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவரான மிதாலி ராஜ், தனது 23 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.

சதத்துடன் கிரிக்கெட்டில் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கிய மிதாலி ராஜ், 1999 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக சர்வதேச அறிமுகம் பெற்றபொது அவருக்கு வயது 17.

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக மிதாலி ராஜ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 4 தசாப்தங்களில் அவர் இந்திய தேசிய அணிக்காக 23 ஆண்டுகள் விளையாடினார்.

பெண்கள் ODI கிரிக்கெட் வரலாற்றில் 7805 ரன்கள் குவித்தவர். ராஜ் 50.68 சராசரியில் 7 ஒருநாள் சதங்கள் மற்றும் 64 அரை சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் இரட்டை சதம் அடித்த இளம் வீரர், அதே போல் பெண்கள் கிரிக்கெட்டில் ஏராளமான தனிநபர் பேட்டிங் சாதனைகளையும் படைத்துள்ளார்.

2020 இல், தசாப்தத்தின் மகளிர் கிரிக்கெட் வீரருக்கான ICC Rachael Heyhoe-Flint விருது மற்றும் தசாப்தத்தின் மகளிர் ODI கிரிக்கெட்டர் விருதுக்கு ராஜ் பரிந்துரைக்கப்பட்டார். இந்தியாவில் ஒரு விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதையும் பெற்றவர்.

சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த ராஜ், “பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! உங்கள் ஆசீர்வாதத்துடனும், ஆதரவுடனும் எனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டின் சச்சினை வாழ்த்தி அனுப்புவோம்்❤️