24வது பிறந்த நாளில் சச்சின் டெண்டுல்கரின் 23 ஆண்டு கால சாதனையை தகர்த்த ஹசரங்க ..!

24வது பிறந்த நாளில் சச்சின் டெண்டுல்கரின் 23 ஆண்டு கால சாதனையை தகர்த்த ஹசரங்க ..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கை அணி 2_1 என தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இலங்கை அணியின் இளம் வீரர் ஹசரங்க மிகப்பெரிய பேசுபொருளாக இந்த தொடர் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்றைய போட்டியில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹசரங்க, இந்தியாவின் துடுப்பாட்ட சரிவுக்கு காரணமாக  திகழ்ந்தார்.இந்த தொடரில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சூரியகுமார் தவை தவிர மற்ற அனைத்து இந்திய வீரர்களும் இந்த தொடர் முழுவதுமாக  அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு தடுமாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 23 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் வசமிருந்த ஒரு சாதனையை நேற்றைய நாளில் ஹசரங்க தகர்த்திருக்கிறார், அல்லது அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார் என்று சொல்லலாம் .

24 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹசரங்க, தன்னுடைய பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு ஆட்ட நாயகன் மற்றும் போட்டித் தொடர் நாயகன் விருதுகளை வென்று கொடுத்திருந்தார் என்பது முக்கியமானது.

1998ஆம் ஆண்டு ஷார்ஜா மைதானத்தில் இடம்பெற்ற Coca-cola கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய பிறந்த தினத்தின்போது இதே மாதிரி ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதை வென்று வரலாறு படைத்தார்.

அதற்கு பின்னர் ஒரு வீரர் தன்னுடைய பிறந்த நாளிலேயே தொடர்நாயகன் விருதையும் ஆட்டநாயகன் விருதையும் வெல்லும் சம்பவம் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று பதிவானது.

தன்னுடைய 24வது பிறந்த நாள் பரிசை ரசிகர்களுக்கு சிறப்பாகவே வழங்கியிருக்கிறார் ஹசரங்க.