24 ஆண்டுகளுக்குப் பின்னர் தடகளத்தில் இலங்கைக்கு பதக்கம்-யுபுன் சாதனை…!

யுபுன் அபேகோன் காமன்வெல்த் விளையாட்டு 2022 இல் ஆடவர் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் 10.14 விநாடிகளில் ஓடிமுடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் யுபுன் அபேகோன் ஆவார்.

24 ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுநலவாய தடகள போட்டிகளில் இலங்கையர் வருவர் பதக்கம் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வை விளக்க வார்த்தைகள் இல்லை. நான் என்னையும், நாட்டையும் பெருமைப்படுத்தினேன், எனக்காக இருந்த அனைவரையும் பெருமைப்படுத்தினேன்!

இந்த பந்தயத்தின் ஒவ்வொரு தருணத்திலும் உடனிருந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என போட்டிக்கு பின் யுபுன் தெரிவித்தார்.

இது எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரிய விஷயங்களின் தொடக்கமாகும். நான் கடினமாக உழைக்கப் போகிறேன்” என்று வெற்றிக்குப் பிறகு யுபுன் பதிவிட்டுள்ளார்.

பாரா தடகள வீரர் பாலித பண்டார இன்று ஆடவர் F42-44/61-64 தட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டங்கன் வைட் (1950) சிரியாணி குலவன்ச (1998), சுகத் திலகரத்ன (1998) ஆகியோருக்குப் பின்னர் பொதுநலவாய போட்டிகளின் தடகளப்போட்டிகளில் பதக்கம் வென்ற 4 வது இலங்கையராக யுபுன் அபேகோன் பதக்கம் வென்றுள்ளார்.