24 ஆண்டுகால மாமாவின் சாதனையை முறியடித்த மருமகன்..!

24 ஆண்டுகால சச்சின் சாதனையை முறியடித்த இந்திய இளம் வீரர் ஷூப்மான் கில்..!

ஜிம்பாப்வே சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும், ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இடம்பெற்று வருகின்றது .

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களைக் குவித்தது .

இந்தியா சார்பில் அதிரடியாக 130 ஓட்டங்கள் குவித்த ஷூப்மான் கில் இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.

1998ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காது 128 ஓட்டங்களை பெற்று கொண்டமையே இந்திய வீரர் ஒருவரின் ஜிம்பாப்வே மண்ணில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

அந்த சாதனையை இன்று 130 ஓட்டங்கள் பெற்றதன் மூலமாக கில் மிறியடித்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது, சர்வதேச போட்டிகளில் இன்று சுமார் 1000 ஓட்டங்களையும் எட்டித் தொட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

சச்சின் மகளுக்கும் இளம் வீரர் கில்லுக்கும் இடையில் காதலிருக்கிறது எனும் சமூக ஊடக வதந்திகளுக்கு மத்தியில் இந்த சாதனை புரியப்பட்டுள்ளது.

 

 

Previous articleஒரு நாயகன் வாரான் -ஷூப்மான் கில் ❤️
Next articleஆசிய கோப்பை இலங்கை அணியில் திடீர் மாற்றம்- 3 வீரர்கள் நீக்கம்..!