25 ஆண்டுகளுக்குப் பின்னர் யூரோ கிண்த்தின் அரை இறுதியை எட்டி தொட்டது இங்கிலாந்து ..!
யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றன.
இன்று இடம்பெற்ற மூன்றாவது, நான்காவது காலிறுதி ஆட்டங்களை தொடர்ந்து அரை இறுதிக்கான நான்கு அணிகளும் தெரிவு செய்யப்பட்டிருந்்தமை முக்கியமான அம்சமாகும்.
இன்று இடம்பெற்ற மூன்றாவது கால் இறுதி ஆட்டத்தில் டென்மார்க் அணி, செக் குடியரசு அணிக்கெதிராக மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்று நான்காவதும் இறுதியுமான காலிறுதி ஆட்டத்தில் ஹரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி உக்ரேன அணியை சந்தித்தது.
நான்காவது நிமிடத்திலேயே இங்கிலாந்து கால்பந்து அணியின் உடைய தலைவர் ஹரி கேன் அற்புதமான ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார் இதன் மூலமாக 1-0 என்று முன்னிலை வகித்தது இங்கிலாந்து அணி.
அதன் பின்னரான ஆட்டத்தில் தொடர்ச்சியான தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தியது இங்கிலாந்து.
அதன் பின்னர் புறப்பட்ட மூன்று கோல்களும் தலையால் முட்டி (Header) கோல்கள் ஆக்கப்பட்டன, இறுதியில் 4 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் இங்கிலாந்து அணி யூரோ கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வானது.
1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து கால்பந்து அணி அரை இறுதியில் விளைையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
#EURO2020 அரை இறுதிப் போட்டிகள்
????
??ஸ்பெயின் ? இத்தாலி ??-ஜூலை 06
??டென்மார்க் ? இங்கிலாந்து ???????-ஜூலை -07