28 ஆண்டுகளுக்குப் பின்னர் கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணம் வென்று அசத்தியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா ..!
கால்ப்பந்து ரசிகர்களின் விருப்புக்குரிய தொடரான கோபா அமெரிக்க கால்பந்து தொடர் இன்று காலை நிறைவுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்க கண்டத்தின் பிரபலமான பிரபல காலபந்து அணிகளான பிரேசில் மற்றும் ஆர்ஜெண்டினா அணிகள் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மோதின.
தியாகோ சில்வா தலைமையிலான நடப்புச் சம்பியனான பிரேசில் அணியும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணிக்கும் இடையிலான இந்த பரபரப்பான ஆட்டத்தில் 1-0 எனும் அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கும் ஆர்ஜெண்டினா கோபா அமெரிக்க மகுடத்தை முடிசூட்டிக் கொண்டுள்ளது.
நடப்புச் சம்பியனான பிரேசில் தங்கள் நாட்டில் இடம்பெற்ற போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை தக்கவைக்க முடியாது தோல்வியை தழுவியது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டித் தொடரை பொறுத்தவரை 19 ஆட்டங்களில் தோல்வியை தழுவாத ஆர்ஜெண்டினா, 13 ஆட்டங்களில் தோல்வியையே தழுவாத பிரேசில் அணியும் முட்டி மோதுகின்ற ஆட்டம் என்கின்ற காரணத்தால் ரசிகர்கள் மிக பெருவாரியாக இந்த போட்டியை எதிர்பார்த்து இருந்தனர் என்பதும் முக்கியமானது.
மெஸ்ஸியைப் பொறுத்தவரையில் அவர் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராக இருந்தாலும் அவரால் Major Tournament என்று சொல்லப்படுகின்ற கால்பந்தின் மிக முக்கியமான தொடர்களில் கிண்ணம் எதனையும் வெற்றி கொள்ள முடியாதவரான குறை அவர் மீது இருந்தது.
அந்த குறையை மெஸ்சி தன் வாழ்நாளில் முதல்முறையாக இன்று கைப்பற்றிய கோபா அமெரிக்க கால்பந்தாட்ட கிண்ணத்தை கைப்பற்றி மாற்றியமைத்திருக்கிறார்.
1993 ஆம் ஆண்டு ஆர்ஜெண்டினா அணி கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் இப்போது மீண்டும் மெஸ்ஸி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
முதல் பாதி ஆட்டத்தில் டி மரியா அற்புதமான கோலை பெற்று ஆர்ஜெண்டினா முன்னிலை வகிக்க காரணமாக இருந்தார்.
அதன்பின்னர் பிரேசில் கோல்பெறும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது ஆர்ரஜன்டீன கோல் காப்பாளர் மார்டினஸ் அற்புதமாக அதற்கான முயற்சிகளை முறியடித்த நிலையில் இறுதியில் 1-0 எனும் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜெண்டினா தன்வசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Copa America Best Player and Top Scorer: Lionel Messi ?? #LionelMessi #CopaAmericaFINAL#CopaAmerica #CopaAmerica2021#Argentina #ArgentinaVsBrazilpic.twitter.com/CyZAVzAy7N
— ABDULLAH NEAZ (@AbdullahNeaz) July 11, 2021
You’ve given us brilliance, I hope this moment gives you happiness. Gracias #Messi #CopaAmericaFINAL pic.twitter.com/O6YjifLJYY
— Jamie Watson (@jamiewatson77) July 11, 2021
Absolutely beautiful from #Neymar and #Messi ?
?#Neymar congratulating #Messi for winning the #CopaAmericaFINAL 16 years after debuting for #Argentina and ending the 28-year trophy drought for #Argentina is CLASSY ?#CopaAmerica2021
— Philip Alimo (@alimo_philip) July 11, 2021
#CopaAmericaFINAL#Argentina
This is what it means to Messi and Argentina ???COPA AMERICA CHAMPS ? pic.twitter.com/EeCRlEbXmp
— MOHIT SHARMA?? (@mohit_sharma_9) July 11, 2021