3 சிஎஸ்கே கேப்டனாக எம்எஸ் தோனி திரும்பியதன் பின்னர் சாத்தியமாகவுள்ள விளைவுகள் – 2023 ம் விளையாடுவார் ?

3 சிஎஸ்கே கேப்டனாக எம்எஸ் தோனி திரும்பியதன் பின்னர் சாத்தியமாகவுள்ள விளைவுகள் – 2023 ம் விளையாடுவார் ?

இந்த சீசனின் முதல் ஆட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவி ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், அணிக்கு மட்டுமல்லாது தனியாக அவருக்கும் முடிவு சரியாக அமையவில்லை. இப்போது தொடரின் நடுவில், ஜடேஜா மீண்டும் எம்எஸ் தோனிக்கு கேப்டன் பதவியை வழங்கியுள்ளார்.

இப்போது, ​​எம்.எஸ்.டி மீண்டும் தலைமையை கைப்பற்றுவது என்பது, அணிக்கு ஏராளமான சுவாரஸ்யமான கூறுகள் உள்ளன என்பதை நமக்கு மறைமுகமாக வெளிக்காட்டுகின்றன.

இந்தக் கட்டுரையில், எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் பதவிக்கு வருவதால் ஏற்படக்கூடிய மூன்று விளைவுகளைப் பார்ப்போம்.

1) எம்எஸ் தோனி ஐபிஎல் 2023 விளையாட முடியும்

அவர் ஐபிஎல் 2023 விளையாட தயாராக இருந்தால் மட்டுமே, எம்எஸ்டி மீண்டும் கேப்டனாக முடிவு செய்திருக்க முடியும்.

MSD முன்னர் ஒரு சந்தர்பத்தில் சேப்பாக்கத்தில் தனது IPL வாழ்க்கையை முடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டு தோனி விளையாடினால் தோனியின் விருப்பம் நடக்கலாம். இம்முறை சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் போட்டிகள் ஒழுங்கமைக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

2) ரவீந்திர ஜடேஜா மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக வாய்ப்பில்லை.

உள்ளூர் கிரிக்கெட்டில், ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியில் அதிக அனுபவம் இருந்ததில்லை. மிக முக்கியமாக பொறுப்பு அவரது தனிப்பட்ட செயல்திறனை பாதித்தது.

முன்பு அதே நிலையில் இருந்து விலகிய ஒருவருக்கு மீண்டும் தலைமைப் பணி வழங்குவது நல்லதல்ல. எனவே, சவுராஷ்டிரா ஆல்ரவுண்டர் ஜடேஜா மீண்டும் சிஎஸ்கேயின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

3) CSK விரைவில் ஒரு வெளிநாட்டு கேப்டனை முதல் முறையாக பெறலாம்.

ஐபிஎல் 2008ல் இருந்து இதுவரை வெளிநாட்டு கேப்டன் இல்லாத ஒரே அணி CSK ஆகும். இருப்பினும், MS தோனி பதவியை காலி செய்த பிறகு அவர்கள் ஒருவரை நியமிக்க வேண்டியிருக்கும்.

ராபின் உத்தப்பா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் இந்த பாத்திரத்தை ஏற்க தகுதியானவர்களானாலும் அவர்கள் வயதானவர்கள்,

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் அனுபவமற்றவர்கள்.

ஜட்டு மீண்டும் கேப்டனாக மாறவில்லை என்றால், CSK சில புதிய விருப்பங்களைப் பார்க்க வேண்டும், CSK வெளிநாட்டு தலைவரை தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினுடைய தலைமைத்துவத்தை மஹேந்திர சிங் தோனி மீண்டும் ஏற்று இருப்பதானது, மேற்குறித்த விடயப் பரப்புக்குள் இன்னும் சில சந்தேகங்களை அல்லது செய்திகளை நமக்கு சொல்வதாகவே அமைந்து இருக்கின்றன என்பதே வெளிப்படையானது.