3 போட்டிகள் 3 சதம் -மிரள வைக்கும் ஜோ ரூட்.

3 போட்டிகள் 3 சதம் -மிரள வைக்கும் ஜோ ரூட்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 1 வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் சதமடித்தார்.

ஆசிய ஆடுகளங்களில் அசகாய திறமையை வெளிப்படுத்திவரும் ஜோ ரூட் , 2021 இல் டெஸ்ட் போட்டிகளில் ஹட்ட்ரிக் சதம் அடித்துள்ளார்.

இலங்கையுடனான காலி டெஸ்ட் போட்டியில் 228 ஓட்டங்களையும் அதன் பின்னர் 2 வது டெஸ்ட்டில் 186 ஓட்டங்களையுமாக மொத்தமாக இலங்கை டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 426 ஓட்டங்களை விளாசிய ரூட் இந்தியாவிலும் மிரட்டுகிறார்.

சென்னை டெஸ்ட்டிலும் தற்போது சதமடித்து தன் வல்லமையை நிரூபித்துள்ளார்.