அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட கடுமையான முழங்கால் உபாதை காரணமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீர்ர் அவிஷ்க பெர்னாண்டோ சில மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளது.
“பயிற்சியின் போது அவிஷ்காவுக்கு கடுமையான முழங்கால் காயம் ஏற்பட்டது, அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது” என்று SLC மூத்த அதிகாரி தெரிவித்தார்.
“அவருக்கு பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை செய்யப்படும், அவர் குறைந்தது 3 மாதங்களுக்காவது ஓய்வில் இருக்கலாம்” என்று ஶ்ரீ லங்கா கிரிக்கட் வட்டாரம் மேலும் கூறியது.
அவிஷ்க பெர்னாண்டோ ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார் , ஆயினும் பெரிய பங்களிப்பு அவரிடமிருந்து வரவில்லை.
நுவான் துஷாரா (காயமடைந்தவர்), ரமேஷ் மெண்டிஸ் (காயமடைந்தவர்), பினுர பெர்னாண்டோ (கோவிட்) மற்றும் வனிந்து ஹசரங்க (கோவிட்) ஆகியோருடன் சுற்றுப்பயணத்தில் தேர்வு செய்ய முடியாத 5வது வீரராக அவிஷ்கா இப்போது ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விளையாடிய 4 T20 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி 5 வதும் இறுதியுமான போட்டியில் நாளை விளையாடவுள்ளது.