3-வது டெஸ்டை வெல்ல இந்தியாவிற்கு வாய்ப்பிருக்கிறது- மைக்கல் வோகன் கருத்து..!

3-வது டெஸ்டை வெல்ல இந்தியாவிற்கு வாய்ப்பிருக்கிறது- மைக்கல் வோகன் கருத்து..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சிறிது இருப்பதாக இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் வோகன் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக முதல் மணி நேரத்தில் இந்தியாா விக்கெட்டை இழக்காமல் துடிப்பாடுமாக இருந்தால் அவர்கள் நேரம் செல்லச்செல்ல அதிகமான ஓட்டங்களை குவிக்க அவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

காலை வேளையில் மூன்று முதல் நான்கு விக்கெட்டுகள் விழுந்தால் இந்தியாவின் சரிவை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஹெடிங்லியில், எந்த நாளின் முதல் மணிநேரமும் – மேற்பரப்பில் எப்போதுமே சிறிது அதிக ஈரப்பதம் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

இன்றைய முதல் மணிநேரம் எளிதாக இருக்காது, பொதுவாக நிறைய விக்கெட்டுகள் வீழ்ச்சியடைவதை நாம் பார்க்கிறோம். ஆனால் நான் சொல்வது என்னவென்றால், அந்த முதல் அமர்வை (Session) இந்தியா ரத்து செய்து, அதிக விக்கட் இழப்பை ஏற்படுத்தாமல் இருந்தால், பிற்பகலில் அது பேட்டிங்கிற்கு நன்றாக இருக்கும், ஏனென்றால் சூரியன் பிரகாசிக்கும்.

ஆடுகளம் வேகம் குறைந்துவிட்டது, அதில் உண்மையான வேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆக மொத்தத்தில் இன்றைய நாளில் முதல் செசனில் இந்தியா விக்கெட் இழப்பை தவிர்த்து சாதுரியமாக விளையாடுமாகமாக இருந்தால், வழமையாகவே ஆச்சரியங்கள் பல நிகழ்ந்த இந்த மைதானத்தில் இந்தியாவிற்கும் ஆச்சரியங்களை நிகழ்த்தவும் வாய்ப்பு இருக்கிறது எனும் கருத்து வோகனிடம் இருந்து வந்துள்ளது.

cricbuzz இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியா நேற்றைய மூன்றாம் நாளில் நிறைவுக்கு வருகின்றபோது 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றுள்ளது ,139 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் காணப்படுகின்றது. ஆடுகளத்தில் புஜாரா ,கோலி ஆகியோர் உள்ளனர்.