நெதர்லாந்தில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் Toss வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது ?
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மூவர் என்று சதம் அடித்தனர், இறுதி 5 ஓவர்களில் இங்கிலாந்து அணி மொத்தம் 84 ஓட்டங்களை குவித்தது, இது மாத்திரமல்லாமல் இங்கிலாந்து அணி இறுதிப் 12 ஓவர்களில் 200 ஓட்டங்களை விளாசியமை சிறப்பம்சம் எனலாம்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜோஸ் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 162 ரன்கள் எடுத்தார். டேவிட் மலான் 109 பந்துகளில் 125 ஓட்டங்களையும், பில் சால்ட் 93 பந்துகளில் 122 ஓட்டங்களையும் பெற்றனர். லியாம் லிவிங்ஸ்டோன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து உலகின் இரண்டாவது அதிவேக அரை சதத்தை சமன் செய்தார்.
பந்து வீச்சில் நெதர்லாந்து அணித்தலைவர் பீட்டர் சீலர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக ஸ்கோர்போர்டு வரலாற்றில் இடம்பிடித்தது.
ஏற்கனவே இங்கிலாந்து அணி அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக படைத்த உலக சாதனையை இன்றைய போட்டியில் முறியடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
483 ஓட்டங்கள் எனும் தங்களது சாதனையை இங்கிலாந்து அணி புதுப்பித்துக் கொண்டது.
YouTube காணொளிகளுக்கு ?