30 ஆண்டுகால காத்திருப்பு -வெற்றியின் விளிம்பில் இலங்கை அணி..!

ஒருநாள் போட்டி வெற்றியின் விளிம்பில் இலங்கை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இலங்கை தனது தாயகத்தில் இவ்வாறானதொரு சாதனையை நிகழ்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகிறது.

1992 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுரங்க தலைமையிலான இலங்கை அணி அலன் பார்டர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்தது.

கடந்த 30 வருடங்களாக பிரேமதாச மைதானத்தில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற முடியாமல் இருந்த நிலையையும் மாற்றியமைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றும் நிலைக்கு வந்துள்ளது.

பிரேமதாச மைதானத்தில் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நான்காவது ஒருநாள் போட்டி மிகுந்த நம்பிக்கையுடன் நடைபெறவுள்ளது.

நாளைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால், இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை வெல்லும் வாய்ப்பைப் பெறுவதுடன், சொந்த மண்ணில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கங்காருக்களை வீழ்த்த முடியும்.

“எங்கள் அணி அடுத்த போட்டியிலும் நல்ல மனநிலையில் உள்ளது. அந்த போட்டியிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. ஒரு அணியாக அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என இலங்கை அணி எதிர்கொள்ளும் சவால் குறித்து பதும் நிஸ்ஸங்க கூறினார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில், பத்தும் நிஸ்ஸங்க 147 பந்துகளை சந்தித்து 137 ரன்கள் குவித்து, தனது முதல் ஒருநாள் சதத்தைப் பெற்றார்.

9 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை வெறலறி பெற்றது. பிரேமதாச மைதானத்தில் இலங்கை அணியின் அதிகூடிய சேஸிங் ஆகும். முன்னதாக, 2012ல் ஹோபார்ட்டில் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்ததே மிகப்பெரிய இலக்காக இருந்தது.

தனது வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸை விளையாடிய பதும் நிஸ்ஸங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர் ஒருவரின் அதிகூடிய ஸ்கோரையும் பதிவு செய்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் வண்ணமயமாக இருந்த நிஸ்ஸங்கவின் இன்னிங்ஸ் ஆட்ட நாயகன் விருதையும் வென்றது.

ஆகமொத்தத்தில் இலங்கை அணி வரலாற்று வெற்றிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

YouTube தளத்துக்கு செல்ல ?

சனத்தின் சாதனையை முறியடித்த நிஸ்ஸங்க..!