30 பேர் கொண்ட அணி- தனிப்பட்ட காரணத்துக்காக விடுவியுங்கள் மத்தியூஸ் கோரிக்கை.தொடரும் சிக்கல்..!

30 பேர் கொண்ட அணி- தனிப்பட்ட காரணத்துக்காக விடுவியுங்கள் மத்தியூஸ் கோரிக்கை.தொடரும் சிக்கல்..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டி தொடர் 13 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

ஆயினும் குறித்த அணியில் தன்னை தனிப்பட்ட காரணங்களுக்காக சேர்க்க வேண்டாம் என்று முன்னாள் தலைவரும் ,சகலதுறை வீரருமான மத்தியூஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரேஷ்ட வீரர்களுக்கான கதவடைப்பால் அணியில் வாய்ப்பு வழங்கப்படாது ஒதுக்கப்படும் மத்தியூஸ், திடீரென ஓய்வு குறித்து சிந்திப்பதாக இன்று காலை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

அதன்பின்னரே மத்தியூஸ், 30 பேர் கொண்ட உத்தேச பட்டியலில் இணைக்கப்பட்ட நாடகமும் அரங்கேறியுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஆயினும் தன்னை குறித்த குழுவில் இணைக்க வேண்டாம் என்றும் மத்தியூஸ் கேட்டுக்கொண்டுள்ளமை முக்கியமானது.

முன்னணி சிரேஷ்ட வீரர்களை ஒதுக்கிக்கொண்டு இளம் வீரர்களோடு பயணிக்க முனைப்பு காட்டும் புதிய தேர்வுக்குழுவின் நடவடிக்கைகளால் அதிருப்திக்குளாகியுள்ள மத்தியூஸ், விரைவில் தனது ஓய்வு அறிவித்தலை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நம்பப்படுகின்றது.