30 வயதுக்கு பின்னர் அதிக டெஸ்ட் விக்கெட்கள் ஹேரத் முதலிடம், ஆண்டர்சன்..?

30 வயதுக்கு பின்னர் அதிக டெஸ்ட் விக்கெட்கள்
ஹேரத் முதலிடம், ஆண்டர்சன்..?

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடி 227  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

38 வயதான ஆண்டர்சன் இந்தப் போட்டியில் வீசிய ரிவேர்ஸ் ஸ்விங் பந்துகள் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தின, இந்த வயதிலும் இப்படி துல்லியமாக பந்துவீசுகிறார் என்பதே எல்லோரது ஆச்சரியமும்.

இந்த நிலையில் ஆண்டர்சன் கைப்பற்றியுள்ள 611 விக்கெட்களில் 30 வயதுக்கு பின்னர் மொத்தமாக 343  விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் ஹேரத் – 398
முரளிதரன் – 388
ஷேன் வோர்ன்  – 386
ஆண்டர்சன் – 343
அனில் கும்ப்ளே – 343

விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர் என்பதும் ம்குறிப்பிடத்தக்கது.

#INDvENG