பெண்களின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னரின் 33 வருட ஒலிம்பிக் சாதனையை ஜமைக்காவின் எலைன் தாம்சன்-ஹேரா இன்று (31) முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
கிரிஃபித் ஜாய்னர் 1988 சியோல் ஒலிம்பிக்கில் 10.62 என்ற பெறுதியில் 100 M கடந்தமையே மகளிர் போட்டிகளின் ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.
ஜமைக்காவின் தாம்சன்-ஹேரா தனது போட்டியாளரான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-ப்ரைஸை 13 வினாடிகளில் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் குறுகிய ஓட்டப்பந்தயத்திற்கு சென்ற ஷெரிக்கா ஜாக்சன் 10.76 இல் வெண்கலம் வென்றார். 100 M ஓட்டப் பந்தயத்தின் முதல் 3 இடங்களும் ஜமைக்காவுக்கே சென்றமை சிறப்பம்சமாகும்.
இன்று 2 ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட ஃப்ரேசர்-ப்ரைஸ் 2008 ஒலிம்பிக் பந்தயத்தில் முதலிடத்தைப் பிடித்தவர், மேலும் அவர் இரண்டு தங்கம் (′2008, ′2012), ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் (′2016) ஏற்கனவே வெற்றி கொண்டவர் , ஆனால் அவரால் இன்று தங்கம் வெல்ல எலைன் தாம்சன்-ஹேரா இடமளிக்கவில்லை.
100 M தடகளத்தில் கிரிஃபித் ஜாய்னரின் உலக சாதனை 10.49 இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பதும் முக்கியமானது.