36- பிரிஸ்பேன், 78 – ஓவல் – காம்பக் என்றால் இப்படி இருக்கணும்- இந்திய கிரிக்கெட்டுக்கு குவியும் பாராட்டுகள்..!

36- பிரிஸ்பேன், 78 – ஓவல் – காம்பக் என்றால் இப்படி இருக்கணும்- இந்திய கிரிக்கெட்டுக்கு குவியும் பாராட்டுகள்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகிறது.

நான்காவது போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பலரும் பலவிதமான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

கடந்த லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற  போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவிய போது ஏராளமான விமர்சனங்களை இந்திய அணி சந்தித்தது.

அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி,  இந்திய கிரிக்கெட் அணி இப்படியான தோல்விகளுக்குப் பின்னர் எப்படி காம்பக் கொடுத்திருக்கிறது என்பது வரலாறு, ஆகவே நீங்கள் பொறுமையோடு அடுத்த டெஸ்ட் போட்டி வரை காத்திருங்கள் என்று தைரியமாக ரவி சாஸ்திரி குறிப்பிட்டார்.

இப்போது அவருடைய கருத்தை இந்தியா மெய்ப்பித்துக் காட்டியது எனலாம் ,இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் அவுஸ்ரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டபோது அடிலெயிட் மைதானத்தில் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.

இந்திய கிரிக்கெட் அணி அதற்கடுத்த MCG மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை மண்கௌவ்வ செய்து வரலாற்று வரலாற்று வெற்றியை ஈட்டியது.

இதற்குப் பின்னர் இங்கிலாந்தில் கடந்த லீட்ஸ்  மைதானத்தில் இடம்பெற்ற 3 வது போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது, இது மாத்திரமல்லாமல் இந்த ஓவல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது.

அப்படி சுருண்டு போன இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ஓட்டங்கள் குவித்து மிகச் சிறப்பான ஒரு காம்பக் கொடுத்து வெற்றியும் பெற்றுள்ளது.

 

கடந்த 9 மாதங்களில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெளிநாட்டு மைதானங்களில் (மெல்பேர்ன், பிரிஸ்பேன், லோர்ட்ஸ், ஓவல் ) 4 டெஸ்ட் வெற்றிகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.