4 ஆண்டுகள் காத்திருந்து பொல்லார்ட்க்கு தக்க பதிலடி கொடுத்த இவன் லூயிஸ்..!
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற முக்கியமான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியட்ஸ் ஆரம்ப வீரரான லூயிஸ் அடித்த சதம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் சதமாக மாறியிருக்கிறது.
டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரான பொல்லார்ட்டுக்கு எதிராக அடித்த சதமாகவே குறித்த சதம் பேசப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் 31 பந்துகளில் 97 ஓட்டங்களை லூயிஸ் பெற்றிருந்த போது, அவரை சதம் அடிக்க விடாமல் சர்ச்சைக்குரிய நோ பால் ஒன்றை பொல்லாரட் வீசினார்.
அதன் பின்னர் இவன் லூயிஸ் இதுவரைக்கும் CPL போட்டிகளில் சதம் எதனையும் பெறமுடியாமல் போயிருந்தது.
நான்கு ஆண்டுகள் காத்திருந்து, அதே பொல்லார்ட் தலைமை தாங்குகின்ற பரின்பேக் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 11 சிக்சர்கள் அடங்கலாக லூயிஸ் சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
160 எனும் இலக்குடன் ஆடிய செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியட்ஸ் அணியினர் 32 பந்துகளில் மீதமிருக்கிற போட்டியில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பின்னர் கருத்து தெரிவித்திருந்த லூயிஸ், அந்த No Ball சம்பவத்தை நினைவுகூர்ந்ததோடு தனக்கு அந்த சம்பவம் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்தியதாகவும், இப்போது கரிபியன் பிரீமியர் லீக்கில் முதல் சதம் அடித்து இருப்பதாகவும் பெருமைப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் காத்திருந்து தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் இவன் லுயிஸ்.