4 புதுமுகங்கள் அறிமுகம்- நாணய சுழற்சியை வென்றது இலங்கை…!

4 புதுமுகங்கள் அறிமுகம்- நாணய சுழற்சியை வென்றது இலங்கை…!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் ஷனாக முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியுள்ளார்.

இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரோடு தொடர்பில் இருந்த ஹர்டிக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ,இஷன் கிஷன் ,பிரித்வி ஷா, கிருஷணப்பா கௌதம் ஆகியோர் அணித்தேர்வில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதனால் இந்திய அணியில் 4 புதுமுகங்கள் இன்றைய போட்டியில் அறிமுகத்தை மேற்கொள்கின்றனர். தேவுத்துட் படிக்கல், ருதூராஜ் கைக்வாட், சேத்தன் சகரியா & நிதிஷ் ராணா ஆகியோருக்கு இன்றைய போட்டியில் அறிமுகம் கிடைத்துள்ளது.

அணி விபரம்.