40 அடி நீளமான பேனர் வைத்து தோனி பிறந்த நாளை கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்க அணியின் தலைவருமான தோனியின் 40 வது பிறந்தநாளை சென்னை ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
40 அடியில் பாரிய பேனர் வைத்து டோனி பிறந்தநாளுக்கு ரசிகர்கள் விருந்து படைத்துள்ளமை முக்கியமானது.
எம்.எஸ். தோனி ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார், எனவே, தமிழக மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் அவரது 40 வது பிறந்தநாளை முன்னிட்டு, 40 அடி பிரமாண்டமான பேனரை உருவாக்கினர்.
பிரம்மாண்டமான பேனரில் அவர் விளையாடிய நாட்களில் இருந்து பல்வேறு புகைப்படங்கள் மற்றும் பல்வேறு கிண்ணங்களை அங்கே பிரசுரித்துள்ளனர்.
டோனி என்றும் தமிழக மக்களின் இதயங்களை விட்டு பிரிக்க முடியாத ஒருவர் என்பதை மக்கள் நிரூபித்துவருகின்றனர்.