40 வயதில் இருபது-20 போட்டிகளில் உலக சாதனையை சமன் செய்த பாகிஸ்தானின் மொகமட் ஹாபீஸ்..!

40 வயதில் இருபது-20 போட்டிகளில் உலக சாதனையை சமன் செய்த பாகிஸ்தானின் மொகமட் ஹாபீஸ்..!

மேற்கிந்திய தீவுகள் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 2வது T20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் ஹாபீஸ் ஒரு புதிய உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

40 வயதான ஹாபீஸ் இளைஞர்களோடு போட்டி போட்டு பாகிஸ்தான் தேசிய T20 அணியில் இடம்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஹாபீஸ் ஒரு Maiden ஓவர் அடங்கலாக ஆறு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

டுவென்டி20 போட்டிகளில் நான்கு ஓவர்களையும் முழுமையாக வீசி மிகச் சிக்கனமாக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற உலக சாதனையை ஹாபீஸ் சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபுதிய உலக சாதனை படைத்த பாகிஸ்தானின் மொகமட் ரிஸ்வான்..!
Next articleஒரு வீரரின் வாழ்க்கையில், நல்லதை விட மோசமான நாட்களே அதிகம் – ஜோகோவிச் எங்கே தவறு செய்தார்!