இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் சாதனைகள் முறியடிக்கும் ஒலிம்பிக் போட்டியாக காணப்படுகின்றது.
ஆண்களுக்கான 400M தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் Warholm, 2021 July 1 இல் தன்னால் நி லை நாட்டப்பட்ட சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார்.
1992 இல் kevin young என்னும் USA நாட்டு வீரரினால் பதிவு செய்யப்பட்டு இருந்த 46.78 செக் என்னும் சாதனை நோர்வே நாட்டின் Warholm இனால் ஜூலை 1 திகதி 2021 இல் oslo வில் இடம்பெற்ற போட்டியில் 46.70 செக் களில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டி இருந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் சாதனை முறியடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் அதிகம் இருந்தது அதே போலவே இன்று 03/08/2021 இடம்பெற்ற 400M தடை தாண்டால் இறுதி போட்டியில் 45.94 செக் களில் நிறைவு செய்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
அதைவிட Benjamin என்னும் USA வீரர் இரண்டாம் இடத்தை 46.17 செக் களில் நிறைவு செய்துள்ளார் இது முன்னைய உலக சாதனையை இவரும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கஒன்று
அதேபோல் மூன்றாம் இடத்தை பெற்ற dos Santos 46.72 செக் களில் நிறைவு செய்துள்ளார் இது முன்னைய சாதனையை முறியடிக்க முடியாத நிலையில் நிறைவு செய்துள்ளார்.
போட்டிகள் கடுமையக்கபட்டால் சாதனைகளும் முறியடிக்கப்படடும் சாதனையாளர்கள் பலர் உருவாகுவார்கள்.
#சந்துரு வரதராசன்