49 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது இந்திய ஹொக்கி அணி..!

40 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது இந்திய ஹொக்கி அணி..!

ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 32வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வரலாற்று சாதனையை நிலைநாட்டி உள்ளது.

49 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஹொக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இந்திய ஹொக்கி அணி 1972 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது, அதற்குப் பின்னர் நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனையை இந்தியா இம்முறை படைத்தது.

பெரிய பிரித்தானியாவை 3-1 எனும் கோல்கள் அடிப்படையில் இந்திய அணி இன்றைய கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய பெல்ஜியம் அணியை சந்திக்கிறது, 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண ஹொக்கி போட்டிகளில் சாம்பியனான பெல்ஜியம் அணி இப்போது உலக ஹொக்கி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான பெல்ஜியத்தை, இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ளும்  என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிலவுகிறது.

இந்திய நேரப்படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி 10:30 க்கு அரையிறுதி ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.