41 ஆண்டுகளுக்கு பின்னர் ஹொக்கியில் பதக்கம் வென்று வரலாற்றை புதுப்பித்த இந்திய ஹொக்கி அணி !!

41 ஆண்டுகளுக்கு பின்னர் ஹொக்கியில் பதக்கம் வென்று வரலாற்றை புதுப்பித்த இந்திய ஹொக்கி அணி !!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று இடம்பெற்ற ஹொக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது .

1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் சுவீகரித்தது .

இதற்குப் பின்னர் நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி இன்று இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான போட்டியில் ஜெர்மனியை வெற்றி கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய போட்டிக்கு மத்தியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-4 எனும் கோல்கள் அடிப்படையில் இன்று வெற்றியை தனதாக்கியது .

வெறுமனே 7 நிமிடங்களில் நான்கு கோல்களை பெற்று ,இந்திய ஹாக்கி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.