41 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மண்ணில் டிராவிட் நிகழ்த்திய சாதனை …!

41 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மண்ணில் டிராவிட் நிகழ்த்திய சாதனை …!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் தவான் முதலில் துடுப்பாட்ட முடிவை மேற்கொண்டார்.

இந்தியா சார்பில் நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியில் ஓர் அபூர்வ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது வரைக்குமான ஒருநாள் போட்டிகளில் ஒன்று, அல்லது இரண்டு வீரர்கள் அறிமுகப்படுத்துவதே வழமையான ஒரு நிகழ்வாக இருந்தது.

ஆனால் இன்று இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணியில் ஒரே தடவையில் 5 புதுமுக வீரர்களை களமிறக்கும் துணிகர தீர்மானத்தை பயிற்சியாளர் டிராவிட் மேற்கொண்டார் .

1980 ஆம் ஆண்டு இறுதியாக இந்திய அணி இவ்வாறு ஒரேதடவையில் 5 புதுமுகங்கள் களமிறக்க பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்தியா சார்பில் சஞ்சு சம்சன், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கௌதம், நிதிஷ் ரானா, சேத்தன் சகரியா ஆகியோர் இன்று அறிமுகம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.