42 வயதில் ஹாட்ரிக் சாதனை படைத்த இம்ரான் தாஹிர்_ மகிழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ..!
உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் ‘The Hundred’ தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
நேற்று இடம்பெற்ற The Hundred’ தொடரில் தென்னாப்பிரிக்காவின் வீீீீீரரும்் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான 42 வயதான இம்ரான் தாஹிர் Hat Trick சாதனையை நிலைநாட்டினார்.
‘The Hundred’ போட்டி தொடரில் Hat Trick சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையும் இம்ரான் தாஹிர் வசமானது.
42 வயதிலும் சுழலில் மாயம் செய்யும் இம்ரான் தாஹிரின் இந்த சிறப்புப் பெறுதிகள் காரணமாக அடுத்து வரவுள்ள ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் கலக்குவார் என சென்னை ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.