42 வயதில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் இங்கிலாந்து ஜாம்பவான்!ஆர்வம் காட்டும் CSK

42 வயதில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் இங்கிலாந்து ஜாம்பவான்!ஆர்வம் காட்டும் CSK

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 42வது வயதில் ஐபிஎல் தொடரில் விளையாட முதல் முறையாக தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஆன ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய மூன்றாவது வீரர் மற்றும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்று பெருமை ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு உண்டு. ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னுடைய உடல் தகுதியை பாதுகாத்துக் கொள்வதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

இதனால் ஐபிஎல் உள்ளிட்ட எந்த ஒரு டி20 தொடரிலும் ஆண்டர்சன் விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில் ஆண்டர்சனுக்கு தற்போது 42 வயது ஆகி இருக்கும் நிலையில் ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த சூழலில் தம்மால் இன்னும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நான் நீட்டிக்க விரும்புகின்றேன். என்னால் இன்னும் பந்து வீச முடியும் என நினைக்கின்றேன். என்னால் சிறிது காலம் விளையாட முடியும். இதனால் எனக்கு எந்த டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நான் பங்கு பெற தயாராக இருக்கின்றேன்.

இனி நாட்கள் செல்ல, செல்ல அது குறித்து என்னால் தெளிவான முடிவு எடுக்க முடியும். தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வருவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். அது குறித்தும் நான் இன்னும் யோசிக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நிறைய வாய்ப்பு இருக்கிறது. நான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி 100 தொடரை பார்த்தேன்.

அதில் முதல் 20 பந்துகள் வரை பந்து ஸ்விங் ஆனது. அதை பார்க்கும்போது இதை நம்மால் செய்ய முடியுமே, ஏன் நாம் செய்யக்கூடாது என தோன்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியும். அதை வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். இதுவரை டி20 லீக் கிரிக்கெட் தொடரில் நான் விளையாடவில்லை.

எனக்கு வயது 42 ஆக்கிவிட்டது. ஆனால் என் உடல் அதை நம்ப மறுக்கிறது. என்னால் இன்னும் வேகமாக ஓடி வந்து வீச முடியும் என்று கூறியிருக்கிறார்.ஆண்டர்சன் என்னிடம் இருக்கும் அனுபவம் நிச்சயமாக ஒவ்வொரு அணிக்கும் பக்கபலமாக இருக்கும். இதனால் ஆண்டர்சன் ஐபிஎல் தொடருக்கு வந்தால் வயதான வீரராக கருதப்பட்டாலும் அவரை சிஎஸ்கே வாங்க முயற்சி செய்யும்.

Previous articleஇந்திய கிரிக்கெட் அணி ஏன் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் ஆண்டுதோறும் விளையாடுவதில்லை தெரியுமா?
Next articleகவுண்டி கிரிக்கெட் விளையாட சென்ற அர்ஷ்தீப் சிங்.. காரணமே ராகுல் டிராவிட் தான்.. வெளிவந்த உண்மை!